search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் உரிமையாளர்"

    • கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றினர்
    • வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள இலவுவிளை காரான் விளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் அஸ்வின் (வயது 30). இவர் சொந்தமாக கார், மேக்சி கேப் வேன்கள் வைத்து ஓட்டி வந்தார்.

    பைனான்ஸ் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அஸ்வின் நேற்று பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட அஸ்வினுக்கு பிரீஷா என்ற மனைவியும், ரெஷ்வினா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    தொழில் போட்டியில் சரக்கு வேன் டிரைவர் உள்பட 2 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சங்கர பாண்டியபுரம் செல்வ விநாயகர் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (வயது 28). சரக்கு ஆட்டோ உரிமையாளர். இவரிடம் டிரைவராக வேலை பார்ப்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசு வைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (25).

    இவர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருந்த போது மணிகண்டன் (30), தங்கப்பாண்டியன் (35), குமரேசன், முத்துக்குமார் ஆகியோர் வந்து வாக்குவாதம் செய்து இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் விஜயேந்திரன் மண்டை உடைந்தது.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் தொழில் போட்டியில் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

    காயமடைந்த விஜயேந்திரன் மற்றும் சங்கிலிபாண்டி சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    ×